இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு : புதிதாக 21,257 பேருக்கு தொற்று..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 21,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,39,15,569 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,50,127 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,32,25,221 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 24,602 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,40,221 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

TRB - ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு..

Fri Oct 8 , 2021
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய வயது வரம்பு உயர்த்துவது குறித்து அறிக்கை இன்று தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இது குறித்து அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பள்ளி கல்வித்துறையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆக இருந்தது. ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில் அதற்கு ஓராண்டு முன்வரை […]
TRB-Recruitment-Board-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய