இந்தியாவில் சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு : புதிதாக 18,454 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 18,454 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 15 ஆயிரத்துக்குள் இருந்தது. இந்நிலையில் பாதிப்பு சற்று உயர்ந்து 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,27,450 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,52,811 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,34,95,808 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 17,561 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,78,831 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம்..

Thu Oct 21 , 2021
2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால் , உச்ச வயது வரம்பினை சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பணிநாடுநர்கள் இணைய […]
PGT-Exam-date-extended-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய