இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,451 பேருக்கு கொரோனா தொற்று ..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 11,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,43,66,987 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் 201 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 266 பேர் இறந்துள்ளளர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,61,057 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,37,63,104 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13,204 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,42,826 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது கடந்த 262 நாட்களில் இல்லாத அளவில் குறைவாகும்.நாடு முழுவதும் நேற்று 23,84,096 டோஸ்களும், இதுவரை 108 கோடியே 47 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Next Post

விண்வெளியில் முதன் முதலில் நடந்த சீன வீராங்கனை..

Mon Nov 8 , 2021
முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை வாங் யாபிங் பெற்றுள்ளார்.வாங் யாபிங் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனை ஆவார். ஆனால் தற்போது முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். விண்வெளி நிலையத்தை சீனா தனியாக டியான்காங் என்ற பெயரில் அமைத்து வருகிறது.இந்த விண்வெளி நிலையத்தில் சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் […]
Chinese-women-walks-first-in-space-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய