
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வில் புதிய மாற்றங்களை தற்போது கொண்டு வந்துள்ளது.தமிழ் பாடத்தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பொதுத்தேர்வுக்கு முன் தமிழ் பாடத்தாள் தகுதி தேர்வை நடத்த டிஎன்பிஎஸ்சி பரிசீலிப்பதாகவும் கூறப்படுகிறது.கொரோனா தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தன. இந்நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுத் துறை, மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என்று கடந்த சட்டசபையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.