
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்த வந்த நிலையில் ,தற்போது மீண்டும் நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது .
இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் புதிதாக 17,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது .இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,62,707 ஆக அதிகரித்துள்ளது .தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது விஸ்வரூபத்தை அடைந்து வருகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR ) புள்ளிவிவரப்படி ,இதுவரை கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,09,20,046 ஆக உள்ளது.கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,58,063 ஆகும் .
நாடு முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,84,598 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .