இந்தியாவில் புதிதாக 14,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 14,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு நேற்று மீண்டும் 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,89,774 ஆக உயர்ந்துள்ளது.இதில் அதிகபட்சமாக கேரளாவில் 8,538, மராட்டியத்தில் 1,410, தமிழ்நாட்டில் 1,127 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,54,712 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,67,367 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 18,762 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,67,695 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாடு முழுவதும் நேற்று 12,30,720 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 102 கோடியே 27 லட்சமாக உயர்ந்துள்ளது.

Next Post

அதிவேகமாகப் பரவும் உருமாறிய கொரோனா ஏஒய். 4.2

Mon Oct 25 , 2021
அதிவிரைவாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை வைரஸை விடவும், இந்த புதிய வகை வைரஸ் மிக அதிகவிரைவாகப் பரவும் தன்மை கொண்டதாக அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த புதிய வகை கொரோனா தற்போது மிக அதிகமாகப் பரவி வருகறிது. டெல்டா வகை கரோனா வைரஸைக் காட்டிலும், இந்த புதிய வகை கொரோனா 10 சதவீதம் மிக விரைவாகப் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதாகவும், இது தற்போது அமெரிக்காவிலும் […]
New-Delta-Variant-AY-4.2
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய