இந்தியாவில் புதிதாக 10,423 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது கடந்த 259 நாட்களில் இல்லாத அளவில் குறைவாகும். இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,42,96,237 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,58,880 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,36,83,581 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 15,021 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,53,776 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாடு முழுவதும் நேற்று 52,39,444 டோஸ்களும், இதுவரை 106 கோடியே 85 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Post

பி.ஆா்க் கலந்தாய்வில் இதுவரை 684 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு ..

Wed Nov 3 , 2021
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 51 கட்டடவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கட்டட அமைப்பியல் (பி.ஆா்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,700-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்ககள் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் நடப்பாண்டிற்க்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அக்.27 இல் தொடங்கி நவ.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த செப்.20-ஆம் தேதி தொடங்கி அக்.6-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது […]
B-Arch-counselling-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய