இந்தியாவில் 6 பேருக்கு புதிய ஏஒய்.4 வகை கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 6 பேருக்கு டெல்டா வகை கொரோனாவின் புதிய உருமாறிய வைரஸாக அறியப்பட்டுள்ள ஏஒய்.4 பாதிக்கப்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த 6 பேருக்கும் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் டெல்டா வகை கொரோனாவின் புதிய உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் 3 பேர் இந்தூர் நகரையும் மற்ற மூவர் இந்தூர் மாவட்டம் மோவ் பகுதியையும் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அனைவரும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதித்து எந்த அறிகுறியும் இல்லாத 41 வயது முதல் 80 வயது கொண்ட இந்த ஆறு பேரின் மாதிரிகள் கடந்த செப்டம்பர் மாதம் புது தில்லியில் உள்ள தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவுகள் கடந்தவாரம் வெளியாகியுள்ளன.

இவர்கள் ஆறு பேருக்கும் டெல்டா வகை வைரஸின் உருமாறிய தொற்றான ஏஒய்.4 பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக இந்தூர் மாவட்ட சுகாதாரத் துறை தலைவர் கூறியுள்ளார். அவர்களுடன் தொடர்பிலிருந்த 50 பேரை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆறு பேருமே இதர மாநிலங்கள், நகரங்களுக்குச் சென்று வந்துள்ளனர். ஆனால் எந்த வெளிநாட்டுப் பயணத்தையும் மேற்கொள்ளவில்லை.

Next Post

இளம் விஞ்ஞானிகள் ஊக்க திட்ட தேர்வுக்கு தடை விதிப்பு..

Tue Oct 26 , 2021
நவம்பர் 7ம் தேதி அறிவிக்கப்பட்ட இளம் விஞ்ஞானிகள் ஊக்க திட்ட தேர்வுக்கு தற்போதுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அடிப்படை அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் இளம் விஞ்ஞானிகள் ஊக்க திட்ட ஆராய்ச்சி (கேவிபிஒய்) தேர்வு நடத்தப்படுகிறது. மேலும்,இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இத்தேர்வு நடக்கிறது. 11ம் வகுப்பு முதல் இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வில் […]
KVPY-Exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய