இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : புதிதாக 31,222 பேருக்கு தொற்று..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.இன்றைய தினசரி பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 31,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,30,58,843 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,042 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,22,24,937 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 42,942 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,92,864 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 69,90,62,776 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

நிபா வைரஸ் நோய்க்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு..

Tue Sep 7 , 2021
நிபா வைரஸ் ஆனது முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில்தான் கண்டறியப்பட்டது.மேலும் இது குரங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது என்று தெரிய வந்ததுள்ளது.உயிர் கொல்லி நோயான நிபா வைரஸ் மேலும் பரவி விடாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. நிபா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இதற்கான தடுப்பூசி மருந்தை தற்போது இங்கிலாந்தில் உள்ள ஜென்னர் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அமெரிக்க தேசிய […]
Nipha-virus-vaccine
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய