இந்தியாவில் கடந்த 209 நாட்களில் இல்லாத அளவில் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 18,346 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,38,53,048 ஆக உயர்ந்துள்ளது.இது கடந்த 209 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் குறைவு ஆகும்.

அதிகபட்சமாக கேரளாவில் 8,850, மகாராஷ்டிராவில் 3,165, தமிழ்நாட்டில் 1,467 மிசோரத்தில் 1,681 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 263 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,49,260 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,31,50,886 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 29,639 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,52,902 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று 72,51,419 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 கோடியே 54 லட்சமாக உயர்ந்தது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் அலகு தேர்வு..

Tue Oct 5 , 2021
நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர அலகு தேர்வு தொடங்குகிறது.இத்தேர்வுகள் மாவட்ட வாரியாக அனைத்து பள்ளிகளிலும் நடக்கிறது.தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு இணையதளம் வழியாக அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் பள்ளிகளில் பதிவு செய்யப்படுகிறது. கொரோன பெருந்தொற்று காரணமாக கடந்த மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் […]
10th-and-12th-unit-test-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய