
என்இஎஸ்டி நுழைவுத் தேர்வானது தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாணவர் சேர்வதற்க்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும்.நடப்பாண்டிற்கான என்இஎஸ்டி நுழைவுத் தேர்வானது வரும் ஜூன் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் NEST மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் உள்ள அணுசக்தி அறிவியல் பாடப்பிரிவுகளுக்காண மாணவர் சேர்க்கையானது என்இஎஸ்டி நுழைவுத் தேர்வுகள் மூலம் நடைபெறுகிறது.
என்இஎஸ்டி நுழைவுத் தேர்வுகள் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 90 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான HALL TICKET (நுழைவுச் சீட்டு) மே மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுத விரும்புபவர்கள் மே 20 முதல் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.