‘நீட்’ எம்.டி.எஸ். கவுன்சிலிங் ஆகஸ்டு 20 முதல் அக்டோபர் 10 வரை நடைபெறும் : மத்திய அரசு தகவல்..

‘நீட்’ எம்.டி.எஸ். கவுன்சிலிங் ஆனது ஆகஸ்டு 20 முதல் அக்டோபர் 10 வரை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான (எம்.டி.எஸ்.) ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 31-ந் தேதி வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இதுவரை கவுன்சிலிங் நடத்தப்படாமல் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பல் மருத்துவ மாணவர்களின் நேரம்மும் ,எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு தேதியும் அறிவிக்கப்படாமல் கிடப்பில் உள்ள நிலையில் என்.டி.எஸ். கவுன்சிலிங்கை 3 வாரங்களுக்கு நடத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ‘நீட்’ எம்.டி.எஸ். கவுன்சிலிங் தேதியை ஒரு வாரத்துக்குள் அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஆகஸ்டு 20-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை ‘நீட்’ எம்.டி.எஸ். கவுன்சிலிங் நடைபெறும் என மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் புதிதாக 38,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

Wed Aug 11 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகம் கண்டு வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 36 சதவீதம் அதிகம் ஆகும். நேற்று 28,204 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது. தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 497 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் நாடு முழுவதும் […]
corona-vaccinate-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய