
நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12-ந்தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.இத்தேர்வை சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.இதில் தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.இந்நிலையில் தற்போது நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் முகரியின் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் குறித்த கூடுதல் தகவல்கள் நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது