
தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .மத்திய அமைச்சகம் நடப்பாண்டு முதல் நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்தப்போவதாக ஒப்புதல் ஒன்றை அளித்துள்ளது .
மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ,இணையவழி நீட் தேர்வில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிக்கல்களை கருத்தில்கொண்டும் ,நீட் தேர்வு ஆனது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது .
மத்திய அரசானது 2019 ஆம் ஆண்டு ,மத்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி(IIT),என்ஐடி(NIT),ஐஐஐடி(IIIT) போன்ற நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த கலந்தாய்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது .இந்த நடைமுறையானது மாணவர்களின் மன உளைச்சலைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகும் .
இதனைப் பின்பற்றியே தற்போது மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட் ),ஆண்டுக்கு இருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டு ,அதற்கான ஒப்புதலையும் மத்திய அரசு அளித்துள்ளது .இதன் மூலம் ,மாணவர்கள் வருடத்திற்கு இருமுறை தேர்வில் பங்குப்பெற்று ,அதிக மதிப்பெண் இதில் பெற்றுள்ளாரோ அதை மட்டும் தெரிவு செய்து கொள்ளலாம் .
நீட் தேர்விற்கான புதிய நடைமுறையானது ,நடப்பாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது .இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் எம்பிபிஎஸ்(MBBS) இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .நிகழாண்டில் நீட்(NEET) தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையானது முன்பை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .