
படகு ஓட்டும் போட்டிக்காக ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சென்னையைச் சார்ந்த நேத்ரா குமணன் பெற்றுள்ளார்.இதுவரை படகு ஓட்டும் போட்டியில் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக இடம்பெற்ற ஒன்பது பேருமே ஆண்களாவர்.தற்போது முதல் முறையாக இந்திய வீராங்கனை தகுதி பெற்றிருப்பது பெரும் சாதனையாகும்.
ஓமனில் முசானா ஓபன் போட்டி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் லேசர் ரேடிகல் பிரிவில் சக இந்தியரான ரம்யா சரவணனைவிட 21 புள்ளிகள் அதிகம் பெற்று கடைசி சுற்றுக்கு முன்பே முதலிடத்தை அவர் உறுதி செய்தார்.இதனைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிற்கு நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார்.
இந்தியா சார்பாக நடைப்பெற்ற 2014 மற்றும் 2018 அம்ம ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேத்ரா குமணன் பங்குபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.