
இந்திய கடலோர காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .இந்திய கடலோர காவல் படையில் நிரப்பப்படாமல் உள்ள 50 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
1 .NAVIK (Domestic Branch) 10th Entry :01 /2021
காலிப்பணியிடங்கள்: 50
மாத சம்பளம் : ரூ .21 ,700
வயது வரம்பு : 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் உடன் 50 சதவிகிதம் மதிப்பெண்களும் பெற்றிருத்தல் அவசியமாகும் .5 சதவிகித மதிப்பெண்கள் சலுகையானது எஸ்சி ,எஸ்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது .
உடற்த்தகுதி : விண்ணப்பதாரர்களுக்கு உடற்தகுதியாக 157 சென்டிமீட்டர் உயரமும் ,மார்பளவு 5 சென்டிமீட்டர் சுருங்கி விரியும் தன்மையும் ,7 நிமிடத்தில் 1.6 கிலோமீட்டரை ஓடிமுடிக்கும் திறனும் ,மேலும் 20 -squaptubs ,10 pushups திறன் பெற்றிருக்க வேண்டும் .
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு ,உடற்த்தகுதி தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் . தகுதியான விண்ணப்பதாரர்கள் www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் .
ஆன்லைன்ல் விண்ணப்பிக்க கடைசி தேதி : 07 .12 .2020 ..