நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 40,120 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது.நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 40,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 585 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,254 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,21,17,826 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 42,295 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,85,227 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 52,95,82,956 உயர்ந்துள்ளது.நேற்று ஒரே நாளில் 57,31,574 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

புதுவையில் செண்டாக்(CENTAC) விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தொடக்கம்..

Fri Aug 13 , 2021
புதுவையில் உயர்கல்வி மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான (செண்டாக்) கலந்தாய்வு விண்ணப்பம் விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது. புதுவை மாநில மாணவர்களுக்கு, நிகழாண்டு உயர்கல்வி மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான சென்டாக் விண்ணப்ப விநியோகத்தை, ஆன்லைன் மூலமாக, புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், கல்வித்துறை அலுவலகத்தில் இருந்துதொடங்கி வைத்தார்.
CENTAC-admission-open-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய