
நாட்டா (NATA) நுழைவுத் தேர்வானது, பி.ஆர்க் (B.Arch) எனப்படும் இளநிலை கட்டிடவியல் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக (தேசிய கட்டிடவியல் திறனறித் தேர்வு) நடத்தப்படும் தேர்வாகும்.
நாட்டா (NATA) நுழைவுத் தேர்வை இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.2019 ஆம் ஆண்டு முதல் நாட்டா (NATA) நுழைவுத் தேர்வில் மாற்றம் கொண்டுவரப்பட்டு,ஆண்டுக்கு இருமுறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டிற்கான நாட்டா (NATA) நுழைவுத் தேர்வு மூலம் பி.ஆர்க். (5 ஆண்டு) படிப்பில் சேர விரும்புவோர் மார்ச் 5-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையும், 2-ம் தேர்வு எழுத விரும்புவோர் மார்ச் 5-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது நாட்டா (NATA) நுழைவுத் தேர்வுக்கான முதல் தேர்வு ஏப்.10-ம் தேதி நடைபெறும் மேலும் அதற்கான முடிவுகள் 14-ம் தேதி வெளியிடப்படும் எனவும், 2-ம் தேர்வு ஜூன் 12-ம் தேதி நடத்தப்பட்டு 16-ம் தேதி முடிவு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நாட்டா நுழைவுத்தேர்வின் முதல் கட்ட தேர்வு நாளை (10-04-2021) நடைபெறவுள்ளது.இந்த ஆண்டுக்கான ஆர்கிடெக் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான நாட்டா நுழைவுத்தேர்வு நாளை (10-04-2021) துவங்குகிறது. ஆன்லைன் வழியாக நடத்தப்படும் இந்த நுழைவுத்தேர்வில் மாணவர்களுக்கு 200 மதிப்பெண்கள் அடங்கிய கேள்விகள் கேட்கப்படும்.
நாட்டா முதல் கட்ட தேர்வு மற்றும் ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்வுகளையும் மாணவர்கள் எழுதலாம்.இந்த இரு தேர்வுகளில்,எந்த தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதை கொண்டு ஆர்கிடெக் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கையானது நடைபெறும்.