
சர்வதேச விண்வெளி நிலையமான நாசா (NASA) ஸிரோ க்ராவிட்டி கழிவறை ஒன்றை விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளது .
இந்த ஸிரோ க்ராவிட்டி கழிவறை ஆனது இந்திய மதிப்பில் சுமார் 169 கோடி செலவில்(23
மில்லியன் டாலர்) உருவாக்கப்பட்டுள்ளது .இந்த கழிவறையானது பெண் விண்வெளி வீரர்களுக்கு எளிமையான வகையில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது .
ஸிரோ க்ராவிட்டி கழிவறையின் சிறப்புகள் :
மனித உடலிலிருந்து புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் கழிவுகளை உறிஞ்சி எடுக்கும் வகையில் இந்தக் கழிவறை வடிவமைக்கப்பட்டுள்ளது.இது பூமியில் இருக்கும் கழிவறைபோல சுற்றிலும் மூடப்பட்டிருக்கும் .இது விண்வெளி வீரர்களின் தனியுரிமை கருதி வடிவமைக்கப்பட்டுள்ளது .
இது வியாழனன்று வர்ஜினியாவின் வாலோப்ஸ் தீவிலிருந்து, விண்வெளி நிலையத்திற்கு தேவையான கருவிகளை கொண்டு செல்லும் ராக்கெட் மூலம் புறப்பட இருந்தது .ஆனால் தொழில்நுட்ப காரணமாக இது நிறுத்திவைக்கப்பட்டது .பின்னர் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு வெள்ளிக்கிழமை இது விண்வெளிக்கு தனது பயணத்தை மேற்கொண்டது .
இது சர்வதேச விண்வெளி நிலையத்தை அக்டோபர் 5 ஆம் தேதி சென்று சேரும் என அறிவித்துள்ளது .
சரக்குகளை சுமந்து செல்லும் இந்த விண்வெளி நிலையத்திற்கு இந்தியாவின் முதல் பெண் வீராங்கனை எஸ்.எஸ். கல்பனா சாவ்லாவை பெருமை படுத்தும் வகையில் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது .