செவ்வாயில்’ப்ளூ டூன்ஸ்’ : நாசா தகவல்

நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.இந்த புகைப்படம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீலநிறம் சூழ்ந்திருப்பதையும் மற்றும் நீலநிற குன்றுகளையும் காட்டுகிறது.

இந்த புகைப்படத்தை செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவரும் மார்ஸ் ஒடிசி ஆர்பிட்டர் (Mars Odyssey) எடுத்துள்ளது.இவை ஒடிஸி ஆர்பிட்டரால் தெர்மல் எமிஷன் இமேஜிங் சிஸ்டம் (THEMIS) என்ற முறையைப் பயன்படுத்தி எடுத்துள்ளது.

நாசா விண்வெளி நிறுவனமா ‘ப்ளூ டூன்ஸ் ஆன் தி ரெட் பிளானட்’ என்ற தலைப்பில் ஒரு சில காட்சிகளை பகிர்ந்துள்ளது.இதில், ஒரு தொகுப்பு மஞ்சள் நிறத்தில் உள்ளது,இது வெப்பமான தட்பவெப்பநிலையைக் குறிக்கிறது, மற்றொன்று நீல அல்லது வெளிர் நிறமானது, இது குளிர்ந்த காலநிலையைக் குறிக்கிறது.

மேலும்,செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளங்களின் தளங்களில் பாம்பு வடிவிலான குன்றுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.இவை காற்றினால் ஏற்பட்ட சுழற்சியின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.இதேபோல்,நாசா 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நீல செவ்வாய் குன்றுகளின் படங்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்,செவ்வாய்க்கிரகத்தில் வானவில் தோன்றியதாகவும்,அதனை நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் படம்பிடித்து அனுப்பியது எனவும் பெரும் பேசு பொருளாக சமூகவலைத் தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது .செவ்வாய் கிரகத்தில் தெரிந்தது உண்மையில் வானவில் தானா என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாசா விளக்கம் ஒண்டரை அளித்துள்ளது.இதன்படி,செவ்வாய் கிரகத்தில் வானவில் என்பது சாத்தியமில்லை எனவும், பெர்சவரன்ஸ் பதிவு செய்யப்பட்ட இந்த புகைப்படத்தின் போது ஒளி சிதறல் லென்ஸ் எரிப்பு ஏற்பட்டு தோன்றியிருக்கக்கூடும் என கூறப்பட்டது.

Next Post

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் : பள்ளி கல்வித் துறை..

Tue Apr 13 , 2021
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே 3 ஆம் தேதி முதல் மே 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற இருப்பதால்,மே 3 ஆம் தேதி நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மொழிப்பாடத் தேர்வு மே 31 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
12th-time-table-change-notification
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய