செவ்வாய் கிரகத்தில் பறக்கவிடப்படும் நாசாவின் ஹெலிகாப்டர்

நாசா விண்வெளி அமைப்பானது இன்ஜெனூட்டி என்ற ஹெலிகாப்டரை ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் செவ்வாய்க்கிரகத்தில் பறக்கவிடப்படும் என தெரிவித்துள்ளது.இதன்மூலம் உலகத்துக்கு வெளியே முதல் முறையாக வேறு கிரகத்தில் ஹெலிகாப்டரை நாசா இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது.இந்த ரோவர் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் மற்றும் நீர் நிலைகள் ,தட்ப வெப்ப நிலைகள் பற்றி ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்டது.

ரோவர் விண்கலமானது சமீபத்தில் செவ்வாய்க்கிரகத்தை படம் பிடித்து நாசாவிற்கு அனுப்பியது.ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் இணைந்து செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது நாசா ‘இன்ஜெனுயிட்டி’ என்ற அதிநவீன சிறிய ஹெலிகாப்டரை செவ்வாய்க்கிரகத்தில் தரையிறக்கி ஆய்விற்கு உட்படுத்தப்பட உள்ளது.இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 8-ந் தேதிக்குள் இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் செவ்வாய்க்கிரகத்தில் பரவிடப்படும் என நாசாவின் அறிவியல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.இதில் குறிப்பாக ரைட் சகோதரர்களின் முதல் விமானத்தின் ஒரு பகுதியை இன்ஜெனூட்டி ஹெலிகாப்டரில் இணைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

Next Post

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 59,118 பேருக்கு தொற்று..

Fri Mar 26 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 59,118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.60 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது .இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 32,987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,46,652 ஆக அதிகரித்துள்ளது […]
Covid-19-vaccine-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய