
நிலவில் சூரிய ஒளி படும் இடங்களில் நீரின் மூலக்கூறுகள் இருப்பதாக அமெரிக்கா விண்வெளி மையமான நாசா தனது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது .இதன் தொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன .இதற்கு முன்பு நிலவின் மேற்பரப்பில் ஹைட்ரஜன் சேர்மங்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது .ஆனால் அது நீரின் மூலக்கூறுகளா, இல்லையா என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தற்போது நடைபெற்ற ஆய்வில் நீரின் மூலக்கூறுகள் இருப்பதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது .
நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதாக சோபியா என்ற தொலைநோக்கி மூலம் நாசா உறுதிப்படுத்தியுள்ளது .இந்த சோபியா(அகச்சிவப்பு வானியல்) தொலைநோக்கியானது நாசாவிற்கு சொந்தமானது ஆகும் .நிலவில் பறந்து கொண்டிருக்கும் இந்த சோபியா தொலைநோக்கியானது நிலவில் சூரிய ஒளி படும் இடங்களில் நீர் இருப்பதாக தெளிவுபடுத்தியுள்ளது .
நிலவின் துருவப்பகுதிகளில் நிரந்தரமாக இருட்டாக உள்ள பள்ளங்களில் நீர் இருப்பதாக ஏற்கனவே கண்டறியப்பட்டது .இந்த நிலையில்,சந்திரனின் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள பூமியிலிருந்து தெரியும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான ‘கிளாவியஸ்’ பள்ளத்தில் நீரின் மூலக்கூறுகள் இருப்பதாக சோபியா தொலைநோக்கி கண்டறிந்துள்ளது .

நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் ,நிலவின் மேற்பரப்பில் அனைத்து இடங்களிலும் நீரின் மூலக்கூறுகள் இருக்கலாம் எனவும் ,இந்த நீரின் மூலக்கூறுகள் எங்கிருந்து வந்தது எனவும் தொடர் ஆராய்ச்சியின் மூலம் கண்டறியலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.நாசா விண்வெளி நிறுவனமானது ,2028ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்கள் சந்திரனில் பணிபுரியும் இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.