நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் : ராகு -கேது நிவர்த்திக்கு…

நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் தலமானது ,நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலமாக கூறப்படுகிறது .

நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் மூர்த்தி ,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்கும் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது .இத்தலமானது காசிக்கு இணையானதாகவும் மற்றும் ராகு ,கேது ,காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது .நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி தலத்தில் இந்திரன் ,சந்திரன் ,நாகராஜன் ,துர்வாச முனிவர் ,சப்த ரிஷிகள் போன்றோர் வழிபட்ட தலமாகவும் சிறந்து விளங்குகிறது .

அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவிலின் சிறப்பு :

நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவிலில் புன்னாகவனம் ,உருத்திர நதி ,சுப புண்ணிய மலை ,சந்திர தீர்த்தம் ,விசுவகன்மிய விமானம் போன்ற ஆறு மங்களங்களும் கொண்ட மகாதலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது .இத்தலத்தில் இறைவன் ஸ்ரீ நாகநாதர் என்ற திருப்பெயரில் காட்சியளிக்கிறார் .அம்பாள் ஸ்ரீ நாகவல்லி என்ற திருப்பெயருடன் தெற்கு நோக்கி தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார் .

புன்னாகவனம் :

ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கு இறைவன் சிவபெருமான் இத்தலத்தில் வைகாசி மாதம் பௌர்ணமி நட்சத்திர நாளில் இத்தலத்தில் காட்சியளித்தாள் இவ்விடம் புன்னாகவனம் என குறிப்பிடப்படுகிறது .புன்னாகவனம் ஆனது இக்கோவிலின் தல விருட்சமாகக் கோவில் பிரகாரத்தில் புன்னாகவனம் அமைந்துள்ளது .

சந்திர தீர்த்தம் :

சந்திர பகவான் நாகநாத ஸ்வாமியை இத்தலத்தில் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதுடன் ,இத்தலத்தில் தங்கியிருந்து ஆணி மாத பௌர்ணமியையொட்டி 10 நாட்கள் விழா எடுத்துள்ளார் என்ற ஐதீகமும் உள்ளது .இத்தலத்தின் தீர்த்தமானது சந்திரனால் உருவாக்கப்பட்டதால் ,இது சந்திர தீர்த்தம் என பெயர்பெற்றது .

தோஷ நிவர்த்தி :

நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவிலின் தலமானது காய்க்கு இணையாக கருதப்படும் தலமாகும் .இத்தலத்தில் உள்ள சந்திர புஸ்கரணியில் நீராடி ,தர்ப்பணம் அளித்து ,தான தர்மங்கள் செய்தால் கயாவில் வழிப்பாடு செய்த பலனும் ,பிதுர்தோஷ நிவர்த்தியும் கிட்டும் என கூறப்படுகிறது .இங்கு அம்பாளுக்கு கிருத்திகை நட்சத்திர தினத்தில் அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டால் சர்வதோஷ நிவர்த்தி கிட்டும் என்பது ஐதீகம் .

கன்னி ராகு :

ஜோதிட சாஸ்திரப்படி ,கன்னி ராசியில் ராகு அமைந்தால் ராஜயோகம் என குறிப்பிடுவார் .இக்கோவிலின் கன்னி பகுதியில் ஸ்ரீ நாகக்கன்னி,ஸ்ரீ நாகவல்லி சமேதராக ஸ்ரீ ராகு பகவான் காட்சியளிக்கிறார் .இக்கோவிலின் தலத்தில் கன்னி பகுதியில் ராகு பகவான் தேவியருடன் கட்சி அளிப்பது சிறப்புக்குரியது .

Next Post

காய்ச்சலுக்கு சிறந்த அருமருந்து : தண்ணீர்விட்டான் கிழங்கு திப்பிலி சூரணம் ...

Sat Jan 30 , 2021
நம் அனைவரும் பொதுவாக இயற்கைமுறையில் சிகிச்சை அல்லது வைத்தியம் மேற்கொள்வதை படிப்படியாக தவிர்த்து வருகிறோம் .விஞ்ஞான வளர்ச்சியினாலும் ,நாகரிக வளர்ச்சியினாலும் நாம் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறோம் .இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை அதிகம் பயன்படுத்தாமல் ,செயற்கை முறையில் கிடைக்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம் .இதில் செயற்கை முறையில் கலப்படம் மிகுந்த ,அதிக நறுமண ஊட்டிகள் நிறைந்த உணவையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர் .இவை அனைத்தும் நம் உடலுக்கு தீங்கு […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய