இந்தியாவில் பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது.நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவின் நிலையறிந்து பல்வேறு உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸின் வகை பி-1617 ஆகும்.
இந்த உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த வைரஸ்களின் பரவல் வேகம் மற்ற வைரஸ்களைவிட அதிகமாகும்.

உருமாறிய கொரோனா வைரஸ் பற்றி உலக சுகாதார நிறுவனம் கூறுகையில்,

புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் இன்னும் தொடர்ந்து பரவுமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. உலகளவில் பரவிய இந்த உருமாற்ற கொரோனா வைரஸ்கள் இந்தியாவில் கட்டுக்கடங்காமல் பரவுவது கவலையளித்துள்னன.

உருமாறிய இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைளை உறுதியாக எடுத்தால் அவசியமாகும் . தனிமனிதர்கள் அளவில் சமூக விலகலைக் கடைபிடித்தல், கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், கூட்டாக இருக்கும் இடங்களைத் தவிர்த்தல், காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்தல், வீட்டிலேயே பணி செய்தல் போன்றவை இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்.இவற்றை முறையாக நம் அனைவரும் கடைபிடித்தால் மட்டுமே உருமாறிய கொரோனா வைரசை ஒழிக்கமுடியும்.

Next Post

இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : ஒரே நாளில் 3,48,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

Wed May 12 , 2021
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது கொரோனா தொற்று 4 லட்சத்தைவிட குறைந்துள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை முதல் அலையை காட்டிலும் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,48,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக […]
covid19-mutated-virus
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய