90 நிமிடங்களில் கொரோனா வைரசை கண்டறியும் நவீன முகக்கவசம் ..

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக காத்துக்கொள்ள நாம் அனைவரும் முகக்கவசம் ,சமூக இடைவெளி மற்றும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை கடைபிடித்து வருகிறோம் .

குறிப்பாக இதில் நாம் அனைவரும் மூலிகை முக கவசம், துணியால் ஆன முககவசங்கள், பிளாஸ்டிக் முககவசம் என பல வகை முகக்கவசங்களை அணிந்து வருகிறோம்.தற்போது தொழில்நுட்ப ரீதியான முககவசங்கள் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.முககவசங்கள் உடன் வைபை(Wi -Fi), புளூடூத்(Bluetooth), ஸ்மார்ட்போன் ஆகியவற்றை இணைக்கும்படியான முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

இந்நிலையில் 90 நிமிடங்களுக்குள் கொரோனா வைரசை கண்டறியக்கூடிய ஒரு புதிய முககவசத்தை மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

காற்றில் கொரோனா வைரஸ் உட்பட வேறு ஏதாவது வைரஸ் இருந்தால் ,அதனை இந்த முககவசத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் கண்டறிந்து உடனடியாக முககவசத்தை அணிந்து இருக்கும் நபருக்கு தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அவர்கள் தொற்றிலிருந்து முழுமையாக காத்துக்கொள்ளலாம். இந்த அதிநவீன நோய்களை கண்டறியும் சென்சார்கள் பொருத்திய கவசங்களை பிரெஞ்சு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

காற்றில் மிதக்கும் வைரஸ் துகள் இந்த சென்சாரில் பட்டாலே இந்த சென்சார்கள் இந்த வைரஸின் தன்மையை கண்டறிந்து விடும். இதற்கு பேட்டரி தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆரம்ப சோதனைகளில் இந்த முகக்கவசம் மிகவும் துல்லியமான முடிவுகளை அளித்துள்ளது , இது தற்போதைய பி.சி.ஆர் சோதனைகளுடன் ஒப்பிடக்கூடியதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Wed Jun 30 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 514, ஈரோட்டில் 420 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 257 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 113 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் […]
district-wise-active-and-discharged-cases-in-30-6-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய