
உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸானது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.இதில் புதிய வகை கொரோனா வைரஸான ‘ம்யூ’ என்ற கொரோனவை கண்காணித்துவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொலம்பியாவில் இந்தாண்டு ஜனவரியில் முதல்முறையாக கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ‘ம்யூ’-வை கண்காணித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் தேவைப்படும் பட்டியலில் B.1.621 என்ற விஞ்ஞான பெயர் கொண்ட ம்யூ வகையை உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “புதிய மரபியல் மாற்றம் அடைந்த கரோனா வகை தடுப்பூசியை எதிர்த்து போராடும் திறன் கொண்டுள்ளது. இதை மேலும் புரிந்து கொள்ள அடுத்தடுத்த ஆய்வுகள் தேவை.
மரபியல் மாற்றம் அடைந்த கொரோனா வகைகளின் தொகுதியாக ‘ம்யூ’ வகை உள்ளது. இந்த வகை வைரஸானது தடுப்பூசி வெளிப்படும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டுள்ளது.அதி தீவிர பரவல் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா, உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், புதிய வகை கொரோனா பரவியுள்ளதா என அச்சம் கொள்ளப்படுகிறது.
கோவிட் – 19க்கு காரணமான SARS-CoV-2 உள்பட பல வைரஸ்கள் கால போக்கில் மரபியல் மாற்றம் அடைந்துவருகிறது. பெரும்பாலான வைரஸ்களின் பண்புகள் மீது மரபியல் மாற்ற அடைந்த வைரஸ்கள் தாக்கங்கள் ஏற்படுத்தவதில்லை. ஆனால், எளிதாக பரவுக்கூடும் தன்மை, வைரஸால் ஏற்படும் தீவிர விளைவுகள், தடுப்பூசிக்கு எதிராக தாக்கு பிடிப்பது உள்ளிட்ட பண்புகள் மீது மரபியல் மாற்றம் அடைந்த வைரஸ்கள் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.