புதிய வகை Mi ஸ்மார்ட் பல்பு வாய்ஸ் கன்ட்ரோலுடன் மிகப் பொலிவாக அறிமுகமாகவுள்ளது ..

Mi ஸ்மார்ட் பல்பு என்ற ஒரு புதிய வகை ஸ்மார்ட் பல்ப்பை ஷாவ்மி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது .

ஷாவ்மி நிறுவனமானது பல வகையான ஸ்மார்ட்போன்களை தயாரித்து ,அறிமுகப்படுத்தி வருகிறது.இந்நிறுவனம் பல்வேறு எலெக்ரோனிக்ஸ் வகை தயாரிப்புகளை ,தயாரித்து வெளியிட்டு வருகிறது .இதன் அடிப்படையில் ஷாவ்மி நிறுவனம் ஒரு புதிய வகை ஸ்மார்ட் பல்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது .இதன் முக்கிய அம்சமானது வாய்ஸ் கண்ட்ரோலுடன் கூடிய ஸ்மார்ட் பல்பு ஆகும் .

Mi ஸ்மார்ட் பல்பின் சிறப்பம்சங்கள் :

*இந்த ஸ்மார்ட் பல்பானது பாலிகார்பனேட் மற்றும் பிளாஸ்டிக் கிளாட் அலுமினியத்தால் ஆனது.
*Mi ஸ்மார்ட் பல்பானது 16 மில்லியன் வண்ணங்களை ஒளிரச்செய்ய வல்லது .
*சாதாரணமாக B22 ஹோல்டரில் இந்த ஸ்மார்ட் பல்ப்பை பொருத்திக்கொள்ளலாம் .
*Mi ஸ்மார்ட் பல்ப்பை மொபைல் ஆப் மூலமாகவும் இயக்க முடியும் .
*இது 220வோல்ட் முதல் 240 வோல்ட் வரையில் மற்றும் 0.07A இல் இயங்க கூடியது .
*இந்த பல்பில் கூகுள் மற்றும் அலெக்ஸா போன்று வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியையும்
கொண்டுள்ளது .

Next Post

விரைவில் அறிமுகமாகவுள்ளது ! சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

Thu Sep 24 , 2020
இந்தியாவில் புதிதாக F சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்போவதாக சாம்சங் கேலக்ஸி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது . சாம்சங் கேலக்ஸி நிறுவனம் ஆனது ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது .இந்நிறுவனம் பல வகையான ஸ்மார்ட்போன்களை விலைக்கு ஏற்றாற்போல் அறிமுகம் செய்து வருகிறது . சாமானிய மனிதர்கள் முதல் கடைக்கோடியில் வசிக்கும் மனிதர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் விலைக்கு தகுந்தாற்போல் ,பல அமசங்களை கொண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு […]
samsung-galaxy-f-series
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய