
காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு உணவு பழக்க வழக்கத்தினால் உடல் ஆற்றலையும் ,மன ஆற்றலையும் இழந்து வருகிறோம் .நவீன உணவு பழக்கத்தினால் இயற்கையாக கிடைக்கும் அறிய உணவு பொருட்களை நம் சிறிதளவு கூட சேர்ப்பது இல்லை .இயற்கையாக கிடைக்கக்கூடிய காய்கறிகளையும் ,கீரை வகைகளையும் உணவாக எடுத்துக்கொண்டாலே நோயற்ற உடலையும் ,மன வலிமையையும் பெறலாம் .நினைவாற்றல் என்பது நமக்கு ஒரு அறிய வகை சக்தியாகும் ,இதனை அதிகரிக்க நம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம் .ஆனால் எளிதில் நம் நினைவாற்றலை அதிகரிக்க வல்லாரைக்கீரை சூரணத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காண்போம் ..
திப்பிலி வல்லாரைக்கீரை சூரணம் :
செய்முறை : முதலில் சுமார் 100 கிராம் திப்பிலியை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளவும் .பின்னர் வல்லாரைக்கீரையை தேவையான அளவு (400 கிராம் ) எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி அதனை தேவையான அளவு அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.பின்பு திப்பிலியை வல்லாரைக்கீரை சாறுடன் சேர்த்து நன்றாக ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பின் அதனை எடுத்து பொடியாக்கி கொள்ளவும் .
நினைவாற்றல் குறைபாடு உள்ளவர்கள் இந்த பொடியை காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளாக எடுத்து கொள்ளலாம் . இதனை தேனில் சேர்த்து மூன்று வேலையும் எடுத்துக்கொள்ளலாம் .
இயற்கையாக கிடைக்கும் கீரை வகைகளை தினமும் எடுத்துக்கொள்வதால் நல்ல நினைவாற்றல் திறனானது மேம்படும் .