
கற்றாழையானது இயற்கையாகவே நம் அன்றாட வாழ்வில் பல்வேறு வகைகளில் நமக்கு பலன்களை கொடுத்து வருகிறது .இதில் முக்கியமாக சரும பிரச்சனைகளுக்கு உகந்த தீர்வாக கற்றாழை உள்ளது .பொதுவாக நாம் அனைவரும் உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்துவது வழக்கமாகும் .அதேபோல் நம் முகமானது எப்பொழுதும் பொலிவாகவும் ,அழகாகவும் தோற்றமளிக்கும் என்றே விரும்புவோம் .ஆனால் அது பல்வேறு காலகட்டங்களில் நமக்கு சாத்தியமாவதில்லை .
எடுத்துக்காட்டாக, கோடை காலத்தில் நமது முகத்தில் பருக்கள் ,எரிச்சல் ,அரிப்பு ,கட்டிகள் போன்றவை தோன்றும் .குளிர்காலத்திலும் இதற்கு இணையாக பல்வேறு பிரச்சனைகளும் சருமத்தில் நம் சந்தித்து வருகிறோம் .சருமத்தில் உள்ள செல்கள் அழுக்காக இருப்பது ஒரு முக்கிய காரணமாகும் .இதற்கு கற்றாழை ஒரு உகந்த தீர்வாக இருக்கிறது .
இன்றைய காலகட்டத்தில் நாம் இயற்கையான முறையை நாடாமல் ,செயற்கையாக கிடைக்கும் பல முக சாயத்தினையும் ,கிரீம்களையும் பயன்படுத்தி வருகிறோம் .இது நம் உடலுக்கு மறைமுகமாக பல தீங்குகளை ஏற்படுத்தி வருகிறது .இயற்கையாக கிடைக்கும் கற்றாழையை பயன்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் முழுமையாக தீரும் .
கற்றாழையின் இயற்கை பயன்கள் :
1 .கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவிவிட்டு அதை முகத்தில் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் .
2 .கற்றாழை ஜெல்லுடன் சிறிது மஞ்சள் தூள் ,பால்,தேன் கலந்த கலவையினை முகத்தில் போட சருமம் பொலிவாக காட்சியளிக்கும் .
3 .எலுமிச்சை சாறுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பொலிவான தன்மை உண்டாகும் .
4 .கற்றாழை ஜெல்லானது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்க உதவுகிறது .சருமத்தை ஆரோக்கியமாகவும் ,அழகாகவும் வைத்திருக்க கற்றாழை ஜெல் பயன்படுகிறது .