குறைந்த செலவில் சிறப்பான மருத்துவ படிப்பு..

உலகம் முழுவதும் மருத்துவ கல்லூரிகள் சிறப்பான முறையில் பாடத்திட்டத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு அமைத்து வருகின்றது. இந்த வகையில் வங்கதேசத்தில் மருத்துவக்கல்வி சிறப்பான ஒரு பாடத்திட்டத்தை கொண்டுள்ளது. வங்கதேச அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவக்கல்வி, இந்திய மருத்துவக் கல்வியின் பாட திட்டத்தையே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

தற்போது இந்தியாவில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பை பெறுவதற்கு சாமானிய மக்களுக்கு சாத்தியமற்றதாய் இருக்கிறது. ஆனால் வங்க தேசத்தில் மருத்துவக்கல்விக்கட்டணம் குறைவாகவே இருப்பதால் சாமானிய மக்களும் அங்கு மருத்துவம் படிப்பது உகந்ததாக இருக்கிறது.

வங்கதேசத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் பாடத்திட்டத்தையும் அனுபவமிக்க ஆசிரியர்களையும் சிறந்த செயல்முறை வகுப்புகளையும் பாட முறைகளையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் எம்பிபிஎஸ் பட்டப் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பதை மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். வங்கதேசத்தில் எம்பிபிஎஸ் படிப்பை நியாயமான கட்டணத்தில் மாணவர்கள் படிக்க முடிவதுடன் நேரடி பயிற்சிகளில் ஈடுபட வாய்ப்பும் கிடைக்கிறது. மேலும் ஆங்கிலத்தில் பாடங்கள் நடத்தப்படுவதால் சர்வதேச மாணவர்களுக்கு இது சுலபமாக இருக்கிறது.

வங்கதேசத்தின் 5 முன்னணி அரசு மருத்துவ கல்லூரிகள்

  • டாக்கா மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்
  • ஸ்ரீ சலிமுல்லாஹ் மெடிக்கல் காலேஜ்
  • ஷஹீத் சுஹ்ரவர்டி மெடிக்கல் காலேஜ்
  • மைமென்சிங் மெடிக்கல் காலேஜ்
  • சிட்டகாங் மெடிக்கல் காலேஜ்

வங்கதேசத்தின் 1௦ முன்னணி தனியார் மருத்துவ கல்லூரிகள்

  • டாக்கா நேஷனல் மெடிக்கல் காலேஜ்
  • கம்யுனிட்டி பேஸ்ட் மெடிக்கல் காலேஜ்
  • பங்களாதேஷ் மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல்
  • ஹோலி பேமிலி மெடிக்கல் காலேஜ்
  • ஜஹருள் இஸ்லாம் மெடிக்கல் காலேஜ்
  • கிரீன் லைப் மெடிகல் காலேஜ்
  • ஈஸ்டர்ன் மெடிக்கல் காலேஜ்
  • குமுதினி வுமன்ஸ் மெடிக்கல் காலேஜ்
  • சில்லேட் வுமன்ஸ் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்
  • மெடிக்கல் காலேஜ் பார் வுமன் அண்ட் ஹாஸ்பிடல்

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Tue Nov 23 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 808 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 36,401 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 13 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 120, […]
district-wise-corona-updates-23-11-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய