
இன்றிரவு(செவ்வாய்க்கிழமை ) செவ்வாய்கிரகத்தை வீட்டில் இருந்தபடியே பிரகாசமாக காணமுடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .கிரீன்விச் நேரப்படி, இன்றிரவு 23:20 நேரப்படி உற்றுநோக்கலாம் என வானவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்..
பூமிக்கு மிக அருகில் செவ்வாய் வருவதே இதற்கு முக்கிய கரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4:50 மணியளவில் இந்த அறிய நிகழ்வு நிகழுமென்று அறியப்படுகிறது..
பூமி – செவ்வாய் – சூரியன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் வருவதே இந்நிகழ்வுக்கு காரணம் ஆகும். இது வானியல் நிகழ்வில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது
இந்நிகழ்வு ஆனது 26 மாதங்களுக்கு ஒருமுறை பூமியும் செவ்வாய் கிரகமும் அருகருகே வந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒன்றாக பயணித்து பின்னர் செவ்வாய் ஆனது மீண்டும் தனது சுற்று வட்டப்பாதையை நோக்கி செல்கிறது .
இந்த பிரகாசமான செவ்வாய்கிரகத்தை நீங்கள் இன்று இரவு தென்கிழக்கு திசையில் சுமார் 9 அல்லது 10 மணியளவில் காணலாம் என வானியல் நிகழ்வுக்கான புகைப்படக் கலைஞர் டாமியன் பீச் கூறுகிறார்.
கடந்த ஆண்டு(2018) நிகழ்ந்த இதேபோன்ற அறிய நிகழ்வில், பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிலான இடைவெளி வெறும் 58 மில்லியன் கிலோ மீட்டர்களாக இருந்தன.இது புகைப்படக் கலைஞர்களுக்கு இந்த அறிய நிகழ்வு ஆனது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது .
இந்த அறிய நிகழ்வை நீங்கள் நல்ல பைனாக்குலர்கள் இருந்தாலும், தூரத்தில் இருந்து பார்க்கும்போது இது நட்சத்திர அல்ல என்றும் ஒரு மிகப் பெரிய கோள் என்பதையும் கண்டறிந்துவிட முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் …