
மத்திய அரசு ஒரு சில திட்டங்களுக்கு மார்ச் 31 வரை கால அவகாசத்தை நீட்டியுள்ளது.இதில் குறிப்பாக பான் கார்டை ஆதாருடன் இணைத்தல், LTC வரி சலுகை, ஐ.டி.ஆர்(ITR) தாக்கல் போன்ற பல திட்டங்களுக்கு மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 206AB பிரிவின் படி, ITR இப்போது தாக்கல் செய்யப்படாவிட்டால், ஏப்ரல் 1, 2021 முதல் இரண்டு மடங்கு TDS செலுத்த வேண்டும்.இந்த அறிவிப்பை வருமான வரித்துறையிடமிருந்து பெறுவீர்கள்.
2019 -20ம் நிதி ஆண்டுக்கான திருத்தப்பட்ட அல்லது தாமதமான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மார்ச் 31 கடைசி நாளாகும்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரி தாக்கல் செய்யாதவர்கள் அல்லது திருத்தப்பட்ட வருமான வரியை செலுத்துபவர்கள் உடனடியாக தங்களது வரிதாக்களைசெய்து பயனடையலாம்.மேலும் தவறும் பட்சத்தில் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் 5 லட்சம் வரையிலான வருவாய்க்கு ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-21 மார்ச் 31 நிதியாண்டிற்கான தொண்டு அறக்கட்டளைகளுக்கு நீங்கள் அளித்த நன்கொடைகள்,மருத்துவ உரிமைகோரல்,வங்கிக் கணக்கில் முதலீடு,ஆயுள் காப்பீட்டு பிரீமியம் (LIC Premium) செலுத்துதல் , பிபிஎஃப் (PPF) போன்றவற்றிற்கு நீங்கள் வருமான வரி விலக்கு உரிமை கோர வேண்டுமென்றால், மேற்குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்,தவறும் பட்சத்தில் மொத்த வருமானத்திற்கும் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.
வருமான வரி வருமானம் என்றால் என்ன?
வருமான வரி வருமானம் என்பது வரி விலக்குகளை கோருவதற்கும், மொத்த வரிவிதிப்பு வருமானத்தை கணக்கிடுவதற்கும் மொத்த வரி பொறுப்பை அறிவிப்பதற்கும் பயன்படும் ஒரு வடிவமே ஐ.டி.ஆர் ஆகும்.மத்திய அரசு வரி செலுத்துவோரின் பயன்பாட்டிற்காக ஏழு வகையான வடிவங்களை கொண்டுவந்துள்ளது.
அவை ஐ.டி.ஆர் 1,ஐ.டி.ஆர் 2,ஐ.டி.ஆர் 3,ஐ.டி.ஆர் 4,ஐ.டி.ஆர் 5,ஐ.டி.ஆர் 6, மற்றும்ஐ.டி.ஆர் 7 ஆகும்.இவை அனைத்தும் வரி செலுத்துவோரின் வருமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.
Income Tax Return (ITR) : 2020-21 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளது, எனவே ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய மார்ச் 31 வரை கால அவகாசம் உள்ளது.இன்னும் குறைந்தபட்சம் 7 நாட்களே உள்ள நிலையில் உடனடியாக வருமான வரி தாக்கல் செய்வது நல்லது,இம்முறையும் நீங்கள் அலட்சியமாக இருந்தால்,கடுமையான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.