2020-21 நிதியாண்டிற்கான வரி சேமிப்பு முதலீட்டை முடிக்க மார்ச் 31 கடைசி நாள்..

2020-21ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி, வரிச் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றிக்கான முக்கிய பணிகளை வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச் சேமிப்பு:

வருமான வரிச் சேமிப்பு 80சி பிரிவின்படி ஆண்டிற்கு 1.5 லட்சம் ரூபாய் வருமான வரிச்சலுகை பெற முடியும்.இந்த தொகையை நீங்கள் சலுகையாக பெற மார்ச் 31 ஆம் தேதிக்குள் முதலீடு செய்யும் பட்சத்தில் வரி பணத்தை நீங்கள் சேமிக்கலாம். இதை தவறும் பட்சத்தில், வருமானவரி என்ற பெயரில் பெரிய தொகையை அரசுக்கு நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும்.

வருமானவரி தாக்கல்:

2019-20 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய மார்ச் 31 கடைசிநாள் ஆகும் .தற்போது, திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய ஏற்கனவே காலக்கெடு முடிவடைந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக மீண்டும் இம்மாதம் 31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீடித்துள்ளது.இதனால் மார்ச் 31க்குள் அபராத தொகையுடன் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்து கொள்வது நல்லது.

2020-21 நிதியாண்டிற்கான உங்கள் வரி சேமிப்பு முதலீட்டை நிறைவு செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆகும், ஆனால் நடைமுறையில் நீங்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளவற்றையும் முதலீட்டு முறையையும் பொறுத்து இது மிகவும் முந்தையது. காசோலை வழியாக நிதி பரிமாற்றம் 3 நாட்கள் வரை ஆகலாம் என்றாலும், நிகர வங்கி வழியாக ELSS திட்டங்களுக்கு இடமாற்றம் செய்வது கூட மார்ச் 31 க்கு ஒரு நாள் அல்லது அதற்கு முன்னர் முடிக்கப்பட வேண்டும்.

ஈக்விட்டி இணைக்கப்பட்ட வரி சேமிப்பு திட்டம் (ELSS) :

ELSS என்பது மிகவும் பொதுவான வரி சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும்.இதில்,ELSS மியூச்சுவல் என்பது ஒரு வகை ஈக்விட்டி-இணைக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும்.ELSS திட்டங்கள் மூன்று வருடங்கள் பூட்டப்பட்ட காலத்தைக் கொண்டுள்ளன.ELSS என்பது முக்கியமான பங்குகளில் முதலீடு செய்யப்படுவதாகும்.ELSS வரி சேமிப்பு திட்டங்களின் கீழ் 1,50,000 ரூபாய் வரை சேமிக்க முடியும்.

Next Post

NIFT பேராசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு

Fri Mar 26 , 2021
NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு டெல்லியில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 16 இடங்களில் உள்ள ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வானது வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்விற்கு நாடு முழுவதும் சுமார் 1304 பங்கேற்க உள்ளனர். தற்போது,இந்திய முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் NIFT பேராசிரியர் பணிக்கான […]
NIFT-Fashion-Technology-in-Delhi
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய