‘மக்கள் பள்ளி திட்டம்’ – மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் திட்டம் : பள்ளிக்கல்வித்துறை..

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டாலும், சில மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த கற்றல் குறைபாடுகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கையாக அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு ரூ.200 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைக்க மக்கள் பள்ளி என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் தினமும் ஒன்றரை மணி நேரத்திற்கு மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று கற்பிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்து கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விவாதிக்கப்பட உள்ளது. மக்கள் பள்ளி திட்டம் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குனர் சுதன் தெரிவித்துள்ளார்.

Next Post

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு : புதிதாக 26,727 பேருக்கு தொற்று..

Fri Oct 1 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 26,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,37,66,707 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களின் நிலவரப்படி பாதிப்பு 19 ஆயிரத்துக்குள் இருந்தது. நேற்று முன்தினம் 23,529 ஆக இருந்த நிலையில், நேற்று மேலும் உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 277 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த […]
corona-virus-updates-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய