
2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு. சட்ட பேரவையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் என அதன் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார் .எம்.எல்.ஏ வாக எனது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் எனவும் கமல்ஹாசன் அறிவிப்பு .தான் எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என்பதை தேர்தல் நேரத்தில் அறிவிப்பதாக கூறியிருக்கிறார் .

செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி மக்கள் நீதி மய்யம் எனவும் ,தமிழ்நாட்டில் 3 வது அணி அமைக்க நல்லவர்கள் அனைவருக்கும் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.பிற கட்சிகளில் இருக்கும் நல்லவர்கள் அனைவரும் வரவேண்டும் என்பதே என் விருப்பம் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .
நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் முழு நிலைப்பாடு ஆகும் .சகாயம் போன்ற நல்லவர்கள் மக்கள் நீதி மய்யத்திற்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார் .ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும் .வேல் யாத்திரைக்கு தடை விதத்தை வரவேற்பதாக கூறியுள்ளார்.மனுஸ்மிருதி நூல் விவகாரம் தற்போது தேவை இல்லாத ஒன்றாகும் ,தற்போது அதனை தவிர்த்தல் நல்லது .
பின்னர் அவர் கூறுகையில் ரஜினியுடன் தான் தொடர்ந்து அரசியல் பேசிவருவதாக கூறியுள்ளார் .மக்கள் நீதி மய்யம் அரசியல் பழி போடும் ,பழி வாங்கும் அரசியல் அல்ல ,முற்றிலும் வழிகாட்டும் அரசியலாகும் .வேலை வாய்ப்பில் சீரமைப்பை அனைவருக்கும் கொண்டு கொண்டு வருவதே முக்கிய நோக்கம் எனவும் கூறியுள்ளார் .