
நடிகர் மாதவன் நடித்த மாறா படத்தின் ட்ரெய்லர் வெளியானது .மலையாளத்தில் வெற்றிப்படமான சார்லி ,தமிழில் மாறா என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது .இப்படத்தில் நடிகர் மாதவன் ,ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,ஷிவடா நாயர்,மௌலி ,அலெக்சாண்டர் பாபு போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் .
மாறா படத்தின் இயக்குனர் தீலிப்குமார் ஆவர். இத்திரைப்படமானது கடந்த டிசம்பர் 17 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது .பின்னர் இப்படமானது ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது .சமீபத்தில் மாதவன் நடித்த லைசன்ஸ் படமானது ஓடிடி தளத்தில் வெளியானது ,இதனை தொடர்ந்து மாதவனின் மாறா படமும் ஓடிடி தளத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது .தற்போது மாறா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது .