
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு முதன் முதலில் தடைவிதித்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது .இதனை பின்பற்றியே ஏனைய பிற நாடுகளும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்துள்ளது .அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிரான தடையை விதித்திருந்தது .இதற்கு இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரம் ஒரு முக்கிய காரணமாகும் .
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையானது செல்லாது என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது .ஆனால் இங்கிலாந்தில் மட்டும் இந்த தடையானது இருந்து வந்தது .இதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு தமிழீழ அரசாங்கம் ஆனது பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகத்திடம் மனு ஒன்றை கோரியிருந்தது .இதில் விடுதலைப்புலிகள் இயக்கம் எந்த ஒரு பயங்கரவாத செயலகளிலும் ஈடுபடவில்லை எனவும் ,விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவும் கோரியிருந்தது .ஆனால் இம்மனுவை பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் நிராகரித்தது .
பின்னர் தமிழீழ அரசாங்கம் Proscribed Organisations Appeal Commission (procedure) என்ற சிறப்பு ஆணையத்திடம் சட்ட நடவடிக்கைகளை கொண்டு சென்றது . விடுதலை புலிகள் அமைப்பு எவ்வித பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடவில்லை என்று வாதிடப்பட்டது மற்றும் விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் இடையூறாக இருக்கிறது எனவும் வாதிட்டது.
எனவே இந்நிலையில் ,விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என அந்த மேல்முறையீட்டு வழக்கில் சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இதில் 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது என கூறப்பட்டுள்ளது.தற்போது அளிக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பு இலங்கைத் தமிழர்களுக்கு தங்களது அறவழி போராட்டத்தை உலகம் அனைத்திலும் கொண்டு செல்வதற்கு இது ஒரு பெரும் ஆதரவாக உள்ளது .