எல்.டி.சி (LTC cash voucher scheme) பயணச் சலுகை – மார்ச் 31 கடைசி நாள்..

எல்.டி.சி சலுகை என்பது நான்கு ஆண்டுகளைக் கால வரம்பாகக் கொண்டதாகும். அதாவது, இந்த நான்கு ஆண்டுக்குள் இரண்டு முறை ஒருவர் சுற்றுலா செல்வது மூலம் அவர் பெற்ற விடுமுறை பயணத் தொகையைச் செலவிட்டு, அதற்கான பயண ஆதாரத்தைக் கொடுத்தால் இந்தத் தொகைக்கு வரி பிடிப்பது தவிர்க்கப்படும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்,விடுமுறை பயணச் சலுகை திட்டம் (LTC cash voucher scheme) ஒன்றை அண்மையில் அறிவித்தார்.இதன்மூலம் பயணம் மேற்கொள்ளாமலே, வரிச்சலுகை பெற முடியும்.இந்தச் சலுகையானது 31.03.2021 வரை மட்டுமே.

இந்த சலுகையின் மூலம் ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்ச படியில் இருந்து 10 நாள் சம்பளம் எல்.டி.சி ஆகக் கொடுக்கப்படும்.இதனைப் பயன்படுத்தி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயணம் மேற்கொண்டு அதற்கான பயணச் செலவு ஆதாரத்தைக் கொடுத்தால், அந்தத் தொகைக்கு வரி பிடிக்க மாட்டார்கள்.

2018 ஜனவரி 1 – 2021 டிசம்பர் 31 வரையிலான நான்கு ஆண்டுகளில் கடைசி நிதியாண்டான 2020-ல் சுற்றுலா பயணம் மேற்கொண்டு எல்.டி.சி வரிச்சலுகை பெற்றுக்கொள்ளலாம் என திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு ஊழியர் இந்தச் சலுகையைப் பெற முடியும். இந்தச் சலுகை மூலம் பலரும் மொபைல் போன், லேப் டாப், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மோட்டார் சைக்கிள், கார் போன்றவை அதிகமாக விற்பனையாகும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கிறது.

Next Post

இந்தியாவில் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா பாதிப்பு..

Wed Mar 24 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 47,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 23,907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதும் புதிதாக 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,34,058 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் […]
corona-virus-vaccination-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய