இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,99,77,861 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 1,167 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,89,26,038 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,89,302 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 81,839 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,62,521 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 28,87,66,201 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Post

இன்ஃப்ளுயன்சா நோய் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ?

Tue Jun 22 , 2021
தற்போது மழைக்காலம் நெருங்கி வருவதால் அனைத்து குழந்தைகளுக்கும் இன்ஃப்ளுயன்ஷா வேக்சினேஷன் போட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஃப்ளு அல்லது இன்ஃப்ளுயன்ஷா என்ற நோயிலிருந்து நம் குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் நமது குழந்தைகளுக்கு வந்தால் எவ்வாறு சமாளிப்பது என்பது நமது அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது. இருப்பினும் காய்ச்சல், மூக்கு அடைப்பு மாற்று மற்ற […]
Influensa-virus
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய