இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு ..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் ஆனது நேற்றைய பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 38,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,10,64,908 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 560 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,02,27,792 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,13,091 ஆகும்.நேற்று ஒரே நாளில் 43,916 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,24,0255 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாடு முழுவதும் இதுவரை 39,96,95,879 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கொரோனா தொற்றின் 5 -க்கும் மேற்பட்ட அறிகுறிகள் ?

Sat Jul 17 , 2021
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உடல் சோர்வு, மூச்சு திணறல், தசை வலி, இருமல், மூட்டு வலி, நெஞ்சுவலி, வாசனை உணராமை, வயிற்றுப்போக்கு, சுவையின்மை ஆகியவை அறிகுறிகளாக சொல்லப்பட்டன. கொரோனா அறிகுறிகள் தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவுகளை ராயல் சொசைட்டி ஆப் மெடிசின் என்ற பத்திரிக்கையில் வெளியிட்டனர்.ஆராய்ச்சியின் முடிவில் கொரோனா பாதிப்புக்கு 5-க்கும் மேற்பட்ட அறிகுறிகளுடன் […]
new-symptoms-of-corona-virus
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய