இந்தியாவில் இரண்டாவது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு ..

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு நாள்தோறும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் தொற்றை முறியடித்து வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 92,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,90,89,069 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 2219 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,75,04,126 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,53,528 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 1,62,664 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக 12,31,415 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 23,90,58,360 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Post

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிய இணையதளம் ..

Wed Jun 9 , 2021
முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளிக்கலாம். இந்த தனிப்பிரிவு இணையத்தளத்தில் புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த இணையதளம் செயல்படுகிறது. பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் தங்களது புகார்களை அளிக்கலாம். முதல்வரின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் […]
cmcell-Website-TN-Govt-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய