லாம்டா வகை கொரோனா : டெல்டாவை விட மிக ஆபத்தான வைரஸ்..

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது வெவ்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது.குறிப்பாக டெல்டா வைரஸ்,இந்த வைரஸ் ஆனது இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டதாகும்.

லாம்டா வகை கொரோனா வைரஸானது தென் அமெரிக்க நாடான பெருவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. இந்த நாட்டில்தான் கொரோனவால் பாதிக்கப்பட்டவா்களின் உயிரிழப்பு விகிதம் உலகிலேயே மிக அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

புதிதாகப் பரவி வரும் லாம்டா வகை கொரோனா வைரஸானது, டெல்டா வகைக் கொரோனவை விட, அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்த கொடிய தீநுண்மி தற்போது உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 4 வாரங்களில் மட்டும் லாம்டா வகை கரோனா 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லாம்டா வகை கொரோனா வைரஸானது அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவது மட்டுமன்றி, டெல்டா கரோனாவைவிட அதிக வேகத்தில் பரவும் தன்மையும் இந்த லாம்டா வகைக் கொரோனாவுக்கு இருக்கலாம் என்று மருத்துவ நிபுணா்கள் சிலா் கவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாம்டா வகை கொரோனா வைரஸ் அதிக அளவாக பெருவில் 82 சதவீதம் பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும், சிலியில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 31 சதவீத புதிய கொரோனா நோயாளிகளிடம் லாம்டா வகை கொரோனா கண்டறியப்பட்டதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Next Post

சிகா வைரஸ் முதன் முறையாக கேரளாவில் கண்டுபிடிப்பு ..

Fri Jul 9 , 2021
சிகா வைரஸ் முதன்முறையாக கேரளத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர் கடந்த மாதம் 28-ந்தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு,அந்த பெண்ணின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் […]
Zika-virus
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய