
பாஜக வின் தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் குஷ்பூ பாஜக வில் இணைந்தார் .குஷ்பூ உடன் தமிழக பாஜக தலைவர் எல் .முருகனும் உடன் இருந்தார் .
டெல்லி யில் பாஜக தேசிய தலைவர் ஜே .பி நட்டாவுடன் குஷ்பு நேரில் சந்தித்து தன்னை பாஜக வில் சற்று நேரத்தில் இணைவதாக கூறியிருக்கிறார் .
இதற்கு முன் குஷ்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் .அதில் காங்கிரசு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தன்னை விடுவித்து கொள்வதாக கூறியுள்ளார் .காங்கிரசு கட்சி 2014 ஆம் ஆண்டு மிகப்பெரிய தோல்வியை தழுவிய நிலையில் குஷ்பூ தன்னை காங்கிரஸில் இணைத்து கொண்டார் ..
காங்கிரசில் இருந்து குஷ்பூ விலகிய காரணம் ?
குஷ்பூ காங்கிரசில் இணைந்த நிலையில்(2014) தான் பணம் ,புகழ் மற்றும் பெயருக்காக காங்கிரசில் இணையவில்லை என்று அன்று கூறினார் .பின்னர் தான் கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பிய என்னை போன்ற சிலரை நசுக்குவதாகவும் ,தான் பெரிய அளவில் கட்சியின் உயர்மட்டத்தில் தொடர்பு இல்லாததாகவும் ,பொது மக்களால் பெரிதும் அங்கீகரிக்கப்படாத சிலர் கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பும் தம்மை புறக்கணிப்பதாகவும் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .
குஷ்பூ வின் விலகல் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி யின் பதில்…

குஷ்பூ காங்கிரசு கட்சியை வலிமைப்படுத்த எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை என்றும் ,அவர் தாமரை மேல உள்ள நீர் போல தான் காங்கிரசு கட்சியில் இருந்தார் எனவும் கே.எஸ். அழகிரி கூறினார்.
பின்னர் அவர் கூறுகையில் , குஷ்பு பாஜக வில் இணைய அவரது கணவர் சுந்தர் சி முக்கிய காரணமாக இருந்தார் எனவும் ,குஷ்பூ பாஜக வில் இணைவதால் காங்கிரசு கட்சிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் ,அவர் வெறும் சினிமா நட்சத்திரமாகவே இருந்தார் எனவும் கூறினார் .