
தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது எனவும் தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழலையர் எல்.கே.ஜி யூகேஜிக்கு பள்ளிகளை திறப்பு பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.