
உணவு ,நம் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒரு ஆகாரமாகும் .இன்றைய சூழ்நிலையில் கலப்படம் என்பது நம் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது .நம் உண்ணும் உணவில் கலப்படமானது மிக பெரிய பங்கு வகிக்கிறது .எனவே கலப்படமற்ற தானிய வகைகளை கொண்டு எளிய முறையில் ஆரோக்கியமான உணவை செய்து சாப்பிடலாம் .இத்தொகுப்பில் மிகச் சிறந்த உணவான கேழ்வரகு அடை செய்வது எப்படி என்று இப்பதிவில் விரிவாக காண்போம்.,
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – ௧ கப்
பெரிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 2
சோம்பு – 1 ஸ்பூன்
பூண்டு – 10 பள்ளு
சமையல் எண்ணெய் – 1 /2 லிட்டர்
முருங்கை கீரை – 1 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை 1 :
கேழ்வரகு மாவுடன் முருங்கை கீரை ,நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் ,நறுக்கி வைத்த 2 பச்சை மிளகாய் ,1 சிட்டிகை சோம்பு , நசுக்கிய பூண்டு 10 மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அடை பதத்திற்கு பிசைய வேண்டும் .
செய்முறை 2 :
பின்னர் பிசைந்த கேழ்வரகு மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும் .பின்பு கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் சூடேறிய உடன் ,நாம் செய்து வைத்த உருண்டைகளை தேவையான அளவிற்கு அடைகளாக தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும் .