ஆபத்தை ஏற்படுத்துமா கீட்டோ உணவுமுறை – கீட்டோ உணவுமுறை என்றால் என்ன ?

இந்தி மற்றும் வங்க மொழி நடிகையான மிஷ்டி முகர்ஜி கீட்டோ டயட் உணவுமுறையை பயன்படுத்தியதால் ,அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் இறுதியில் அவர் உலக வாழ்வை நீத்தார் .கீட்டோ உணவுமுறையை பின்பற்றியதால் அவரது சிறுநீரகம் செயலிழந்ததாக கூறப்படுகிறது .வெள்ளிக்கிழமை இரவு ,பெங்களுருவில் அவர் காலமானார் .அவரது மரணமானது கீட்டோ உணவுமுறையில் நிகழ்ந்ததா என்று உறுதிப்படுத்தமுடியவில்லை ,எனினும் கீட்டோ உணவுமுறை ஒரு விவாதப் பொருளாக அடிபடுகிறது .

கீட்டோ உணவுமுறை அல்லது உணவு என்றால் என்ன ?

உடலானது ஆற்றலுக்காக கீட்டோன்களை பயன்படுத்துவதே கீட்டோ டயட் என அழைக்கப்படுகிறது .கீட்டோ டயட் என்பது அதிக கொழுப்புச்சத்து சார்ந்த உணவு ஆகும் .கீட்டோ உணவில் அதிக கொழுப்புச்சத்து உள்ளதாக சொல்லப்படுகிறது .இந்த உணவில் ,கீட்டோ ஷேக்ஸ், சீஸ், ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள் உட்கொள்ளப்படுகின்றன.கீட்டோ உணவில்கார்போஹைட்ரேட்டுகள் (மாவுச்சத்து) மிகக் குறைவு மற்றும் புரதம் மிகவும் மிதமான அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் கொடுக்கப்படுகிறது.

ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஷிகா சர்மாவின் கூற்று :

கீட்டோ உணவை உட்கொள்ளும்போது அது விரைவில் ஜீரணிக்காது.ஜீரணிக்காத உணவானது எல்லாமே குடல் வழியாகவே வெளியேறுகிறது .கல்லென்றால் மற்றும் பித்தப்பையினுள் ஜீரணிக்கப்பட்ட உணவானது நிரம்புகிறது .

கீட்டோ உணவை உட்கொண்டவர்களுக்கு அதன் பக்க விளைவானது இரண்டு அல்லது மூன்று நாட்களில் தோன்றுகிறது .கீட்டோ உணவை எடுத்து கொண்டவர்கள் உங்கள் கல்லீரல் மற்றும் பித்தப்பையினுள் ஏற்கனவே சில பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் கீட்டோ உணவின் விளைவை இரண்டு அல்லது மூன்று நாட்களிலே காண்பீர்கள் . கல்லீரல் மற்றும் பித்தப்பையினுள் பிரச்சனைகள் இல்லாதவர்கள் கீட்டோ உணவின் மோசமான விளைவை இரண்டு அல்லது மூன்று மாதங்களில் காண்பீர்கள் .

பொதுவாக மக்கள் உடல் எடையை அதிகரிக்க கூடிய உணவுகளை விரும்பி உண்கிறார்கள் ,ஆனால் அவற்றை ஒதுக்க மிகவும் சிரமப்படுகிறார்கள் .உடல் எடையை வெகு விரைவில் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது அவர்கள் தவறான உணவுமுறையை கையாண்டு உடல் எடையை குறைக்கிறார்கள் ,அது பின்னாளில் அவர்களது உடல் நிலையை மோசமான நிலைக்கு தள்ளிவிடும் .இதேபோல் உடல் எடையை குறைக்க கீட்டோ உணவுமுறையானது எளிய உணவாக அவர்களது பார்வையில் தென்படுகிறது ,உடன் விளைவுகளையும் ஏற்படுத்துகிறது .

நம் உணவு முறையில் மாற்றத்தையோ அல்லது புதிய உணவுமுறையையோ பயன்படுத்தும்போது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெற்று ,அவர்களது வழிகாட்டுதலை பின்பற்றுதல் நல்லது .உடல் நிலையை பேணி காப்பது மிகவும் அவசியமாகும்.

Next Post

விரைவில் அறிமுகமாகவுள்ள OPPO A15 ஸ்மார்ட்போன் - பிரீமியர் டிசைன் மாடலில்..

Thu Oct 8 , 2020
ஒப்போ நிறுவனமானது தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது .இந்த வகையில் ஒப்போ நிறுவனம் தனது ஏ-சீரிஸ்ன் வழியில் ஒப்போ A15 ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது . OPPO A15 ஸ்மார்ட்போனின் தயாரிப்பு மற்றும் சில அம்சங்களை அமேசான் நிறுவனமானது வெளிபடுத்தியுள்ளது .அமேசான் வெளியிட்ட பட்டியலின்படி ஒப்போ A15 கேமரா ஆனது AI அம்சங்களுடன் வெளிவருவதாக அறிவித்துள்ளது .ஒப்போ A15 ஸ்மார்ட்போன் ஆனது பல வண்ண கலர்களில் […]
Oppo-A15-smartphone
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய