
நாடு முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸானது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது .கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது குறையத் தொடங்கிய நிலையில் ,கொரோனா 3 வது அலை பெரும் அபாயத்தை விளைவிக்கும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
நாட்டில் ‘கப்பா’, ‘டெல்டா’ வகை உருமாறிய கொரோனா தீநுண்மிகள் கடந்த 2 மாதங்களில் அதிக அளவில் பரவியதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .கப்பா வைரஸானது ,டெல்டா வைரஸைக் காட்டிலும் பரவும் தன்மை சற்றுக் குறைவாகவே உள்ளது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கப்பா, டெல்டா வகை கொரோனா வைரஸானது முதலில் மகாராஷ்டிரத்தில் மட்டுமே பரவி வந்தன. ஆனால், தற்போது மேற்கு வங்கம், ஆந்திரம், தில்லி, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ்களின் பரவல் தன்மை காணப்படுகிறது.
ராஜஸ்தானில் இதுவரை 11 பேருக்கு கப்பா வகை உருமாறிய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கப்பா வைரஸானது ஜெய்ப்பூர் பகுதிகளில் தலா நான்கு பேருக்கும், பார்மெர் பகுதியில் இரண்டு வேருக்கும், பில்வாரா பகுதியில் ஒருவருக்கும் கப்பா வகை உருமாறிய கரோனா தொற்று பாதித்திருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பரில் நாடு முழுவதும் உள்ள 10 தேசிய ஆய்வகங்களை இணைத்து ‘இன்சாகாக்’ என்ற குழுவை அமைத்துள்ளது. இக்குழுவானது உருமாறிய கொரோனா வைரஸின் மரபணு தொடா்பான ஆய்வுகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.