
இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதியை வழங்கியுள்ளது மத்திய சுகாதாரத் துறை.
இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 4 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 5வது தடுப்பூசியாக தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒரே ஒரு டோஸ் போட்டுக்கொள்ளும் வகையில் அதன் தடுப்பூசியை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
உலக முழுவதும் டெல்டா வகை கரோனா வேகமாக பரவிவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி தடுப்பூசி தயாரிப்பதை மேலும் தீவிரப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த ஒரு தவணை தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி அந்நிறுவனம் மத்திய அரசிடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி விண்ணப்பித்திருந்தது.இந்நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.