
தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (ஜே.என்.யு.இ) செப்டம்பர் 20 முதல் 23 வரை இரண்டு அமர்வுகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.என்.யு. நுழைவுத் தேர்வுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்கலைக் கழகத்தில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் jnuexams.nta.ac.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.என்.யு. நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வு மூன்று மணி நேரத்திற்கு நடைபெறும்.காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மற்றும் பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை 6 மணி நேரம் வரை நடைபெறும்.சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் தேர்வுகள் நடைபெறவுள்ளது.