பி.ஆர்க் படிப்புக்கான கலந்தாய்வில் ஜெஇஇ எழுதியவர்களும் பங்கேற்கலாம்..

தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு ஜெ.இ.இ. அல்லது நாட்டா நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த நடைமுறையானது கடந்த ஆண்டு (2020-21)வரை பின்பற்றப்பட்டு வந்தது.இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில்(2021-2022) பி.ஆர்க் படிப்புக்கான கொள்கை விளக்க குறிப்பில் நாட்டா நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த நடைமுறையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.இந்த மனுவில் பிற மாநிலங்களில் ஜெ.இ.இ. தேர்வு எழுதியவர்களும் பி.ஆர்க் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் நாட்டா தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூற முடியாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,பி.ஆர்க் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளதால், நாட்டா மற்றும் ஜெ.இ.இ. தேர்வில் தகுதி பெற்றவர்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். மேலும் ஜெ.இ.இ. தேர்வில் தகுதி பெற்றவர்களால் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலாததால், ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்க அனுமதித்து கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.பின்னர் வழக்கு விசாரணைக்கு மத்திய அரசு ,தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெளிவான விளக்கத்தை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Next Post

விண்வெளியில் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் - நாசா வானியல் வல்லுனர்கள் கண்டுபிடிப்பு..

Wed Oct 27 , 2021
விண்வெளியில் பால்வெளிக்கு வெளியே கோள் இருப்பதற்கான அறிகுறிகளை வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது பால்வெளியில் இருந்து 2.8 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த புதிய கோளின் கண்டுபிடிப்புக்கு எம்51-1 என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த புதிய கோள் கிட்டத்தட்ட சனி கிரகத்தின் அளவை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,நாம் பால்வெளிக்கு வெளியே ஒரு கிரகத்தை […]
NASA-Invention-of-new-planet

You May Like

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய